பாரதியாரின் - பாரத ஜனங்களின் தற்கால நிலைமை..!

பாரதியாரின் - பாரத ஜனங்களின் தற்கால நிலைமை..!

கல்லூரி முதலாம் ஆண்டு தமிழ் அலகு 1

tamil exam notes,

பாரதியார்..!

★ அடிமைத் தலையில் சிக்குண்டு உறங்கிக் கிடந்த தமிழகத்தைத் தம் பாட்டு திறத்தால் எழுப்பி எழுச்சியுறச் செய்தவர் மகாகவிபாரதியார்.

★ சுப்பீரமணிய பாரதியார் 11.12.1882-இல் எட்டையபுரத்தில் சின்னசாமி அய்யருக்கும், இலக்குமியம்மையாக்கும் மகனாகப் பிறந்தார். 

★ நெல்லை இந்துக் கல்லூரியில் பயின்ற இவர், பதினோராம் வயதிலேயே சமஎஸ்தானப் புனைர்களால் பாரதி என்னும் பட்டம் சூட்டப்பெற்றுனர்.

★ செல்லம்மாள் இனர்தம் துணைனி ஆனார்.

★ சுதந்திர வேட்கையினைப் பாரதத்திலும், குறிப்பாகத் தமிழகத்திலும் ஊட்டிய பாரதியார் இவருடைய சோதிமிக்க நவகவிதைகள் சுவை புதிது, பொருள் புதிது. வளாம்: புதிது, சொல் புதிது என்று திகழ்பனையாகும்.

★ பாரதியாரின் சாண்ணன்பாட்டு இறைபுணர்வோடு காதலுணர்னையும் கட்டுவன.

★ பாஞ்சாலி சபதம் அறத்தின் வெற்றியையும், பெண்ணினத்தின் சீர்மையை விளக்குவதாகும்.

★  குயில்பாட்டு இயற்கையின் பேரெழிலை விளக்குவதோடு தத்துவக் கருத்துக்களையும் எடுத்தியம்புவதாகும்.

★ பாரதியார் வருவதுணரும் பேரறினாளர்; 19-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலூர் வாழ்ந்த அவர், இன்றைய அறிவியல் வளர்ச்சியினை அன்றே இயம்பினார்.

★ உலக உயிர்களிலெல்லாம் இறைவனைக் கண்ட பாரதியார், சாதி சமய வழக்குகளை வெறுத்தவர்.

★ பாரதிப்பெருமகனார் 12.09.1921ல் இயற்கை எய்தினார்.

★"அறிவே தெய்வம்" என்றும், 'சுத்த அறிவே சிவம்" என்றும் போற்றிய பாரதியார் தமிழ் வாழும்வரை வாழ்வார்.

★ பாரதியார் கவிதைகளில் "பாரத ஜனங்களின் தற்கால நிலை" என்னும் தலைப்பில் அமைந்த பாடல் பாடப்பகுதியாகும்.

பாரத ஜனங்களின் தற்கால நிலைமை

(நொண்டிச் சிந்து)

1. நெஞ்சு பொறுக்கு திலையே  - இந்த  

நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால்.

அஞ்சி யஞ்சிச் சாவார்  - இவர்

அஞ்சாத பொருளில்லை அவனியிலே:   

வஞ்சனைப் பேய்கள் என்பார் - இந்த 

மரத்தில் என்பார் அந்தக் குளத்தில் என்பார்:

 துஞ்சுது முகட்டில் என்பார்  - மிகத்

 துயர்ப்படுவார் எண்ணிப்பயப்படுவார்             

(நெஞ்சு)


2. மந்திர வாதி என்பார் - சொன்ன 

மாத்திரத்தி லேமனக் கிலிபிடிப்பார்

யந்திர சூனியங்கள் - இன்னும் 

எத்தனை ஆயிரம் இவர்துயர்கள்! 

தந்த பொருளைக் கொண்டே - ஜனம்

தாங்குவர் உலகத்தில் அரசரெல்லாம்; 

அந்த அரசியலை  - இவர் 

அஞ்சுதரு பேயென் றெண்ணி நெஞ்சம் அயர்வார் 

(நெஞ்சு)


3. சீப்பாயைக் கண்டு அஞ்சுவார்  - ஊர்ச்

 சேவகன் வருதல்கண்டு மனம்பதைப்பார்;

 துப்பாக்கி கொண்டு ஒருவன் 

வெகு தூரத்தில் வரக்கண்டு வீட்டிலொளிப்பார்; 

அப்பால் எவனோ செல்வான்  - அவன்

ஆடையைக் கண்டுபயந்தெழுந்து நிற்பார்; 

எப்போதும் கைகட்டுவார் - இவர் 

யாரிடத்தும் பூனைகள்போல் ஏங்கிநடப்பார்.

(நெஞ்சு)

4. நெஞ்சு பொறுக்கு திலையே - இந்த 

 நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால்.

 கொஞ்சமோ பிரிவினைகள் -  ஒரு 

கோடி என்றால் அது பெரிதாமோ?    

ஆறுதலை யென்று மகன் சொல்லி விட்டால்

நெஞ்சு பிரிந்திடு வார் -பின்பு 

நெடுநாள் இருவரும் பகைத்திருப்பார்

(நெஞ்சு)


5.சாத்திரங்கள் ஒன்றும் காணர்- பொய்ச்

சாத்திரப் பேய்கள் சொல்லும் வார்த்தை நம்பியே 

கோத்திரம் ஒன்றாயிருந்தாலும் ஒரு

கொள்கையிற் பிரித்தவனைக் குலைத்திகழ் வார்; 

தோத்திரங்கள் சொல்லி அவர்தாம் -தமைச்

சூதுசெய்யும் நீசர்களைப் பணிந்திடுவார்;

 ஆத்திரங் கொண்டே இவன் சைவன்  - இவன்

 அரிபக்தன் என்று பெருஞ்சண்டையிடுவார்.


6. நெஞ்சு பொறுக்கு திலையே - இதை

நினைந்து நினைந்திடினும் வெறுக்கு திலையே; 

கஞ்சி குடிப்பதற்கு கிலார் - அதன் 

காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார்

பஞ்சமோ பஞ்சம் என்றே - நிதம் 

பரிதவித்தே உயிர் துடிதுடித்துத்

துஞ்சி மடிகின் றாரே - இவர்

துயர்களைத் தீர்க்கவோர் வழியிலையே

 (நெஞ்சு)


7. எண்ணிலா நோயுடையார் - இவர் 

எழுந்து நடப்பதற்கும் வலிமையிலார்

கண்ணிலாக் குழந்தை கள்போல் - பிறர்

காட்டிய வழியிற்சென்று மாட்டிக் கொள்வார்;

நண்ணிய பெருங்கலைகள் - பத்து

நாலாயிரங் கோடி நயந்துநின்ற.

புண்ணிய நாட்டினிலே - இவர் 

பொறியற்ற விலங்குகள் போல வாழ்வார்

(நெஞ்சு)



Comments

Popular posts from this blog

பாரதிதாசனின்-தமிழின் இனிமை..!

2. வேத கலாச்சாரம் (Harappan/Indus Civilization)

1. ஹரப்பா/சிந்து நாகரிகம் (கிமு 2500 கிமு -1750)