பாரதிதாசனின்-தமிழின் இனிமை..!

பாரதிதாசனின்-தமிழின் இனிமை..!

கல்லூரி முதலாம் ஆண்டு தமிழ் அலகு 1 

tamil exam notes,

பாரதிதாசன்..!

★ தமிழுக்கும் அமுதென்று பேர் எனக் கவிதை யாத்து, தூங்கிய தமிழரைத் தட்டி எழுப்பியவர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார்.

★ இவர் 29.4.1891 இல் புதுவையில்  திரு. கனகசபை இலக்குமி  அம்மையாருக்கு மகவாய்ப் பிறந்தார். 

★ 1908-இல் காரைக்காலில் ஆசிரியப் பணியில் சேர்ந்தார்.

★ இவர் இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழிலும் வித்தகராய் விளங்கினார். 

★ பெருங்கவிஞர் பாரதியாரின் மாணவரானார். ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியின் கவிதா மண்டலத்தைச் சார்ந்த கனக சுப்புரத்தினம் என்னும் பெரும் பேறுபெற்றார். 

★ இவர் எழுதிய முதற்கவீதை 'எங்கெங்குக் தொடங்கும் கவிதையாகும். காணிலும் சக்தியடா எனத் தொடஙகும் கவிதை ஆகும்.

★ பாரதிதாசன் கவிதைகள் நான்கு தொகுதிகளாக வெளிவந்துள்ளன.

★ அவை  குடும்ப விளக்கு. இருண்டவீடு, பாண்டியன் பரிசு. அழகின்சிரிப்பு. குறிஞ்சித்திட்டு, தமிழியக்கம், இசையமுது முதலான பல நூல்களையும் எழுதியுள்ளார். 

★ கற்கண்டு. பிசிராந்தையார், இரணியன் அல்லது இணையற்ற வீரன் போன்ற பல் சுவை நாடகங்களையும். சில சிறுகதைகளையும் எழுதியுள்ளார். 

★ 72 ஆண்டுகள் நிறைவாழ்வு வாழ்ந்த புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனார்.

★  21.04.1964 அன்று இயற்கை எய்தினார்.


இங்கு பாரதிதாசன் கவிதைகளில் 'தமிழின் இனிமை', 'சங்கநாதம்' ஆகிய கவிதைகள் பாடமாக்கப்பட்டள்ளது.

தமிழின் இனிமை

கனியிடை ஏறிய சுளையும் - முற்றல்

கழையிடை ஏறிய சாறும் 

பனிமலர் ஏறிய தேனும், காய்ச்சுப் 

பாகிடை ஏறிய சுவையும் 

நனிபசு பொழியும் பாலும் - தென்னை 

நல்கிய குளிரிள நீரும், 

இனியன என்பேன் எனினும் - தமிழை

 என்னுயிர் என்பேன் கண்டீர்!


பொழிலிடை வண்டின் ஒலியின் ஓடைப்

புனலிடை வாய்க்கும் கலியும், 

குழலிடை வாய்க்கும் இசையும் - வீணை

கொட்டிடும் அமுதப் பண்ணும், 

குழவிகள் மழலைப் பேச்சும் - பெண்கள்

கொஞ்சிடும் இதழின் வாய்ப்பும்,

விழைகுவ னேனும், தமிழும் - நானும் 

மெய்யாய் உடலுயிர் கண்டீர்!

பயிலுறும் அண்ணன் தம்பி, அக்கம்

பக்கத் துறவின் முறையார், 

தயைமிகு உடையாள் அன்னை -  என்னைச்

சந்ததம் மறவாத் தந்தை,

குயில்போற் பேசிடும் மனையாள், - அன்பைக்

கொட்டி வளர்க்கும் பிள்ளை, 

அயலவ ராகும் வண்ணம் - தமிழ் என்

அறிவினில் உறைதல் கண்டீர்!

நீலச் சுடர்மணி வானம், - ஆங்கே

நிறையக் குளிர்வெண்ணிலவாம். 

குடல்மேல் எல்லாம் ஒளியாம். 

மாலைச் சுடரினில் மூழ்கும் -  தலை

மலைகளின் இன்பக் காட்சி, 

மேலென எழுதும் கவிஞர் - தமிழின் 

 விந்தையை எழுதத் தரமோ?


செந்நெல் மாற்றிய சோறும் -  பசுநெய் 

தேக்கிய கறியின் வகையும் 

தன்னிகர் தானியம் முதிரை - கட்டித்

தயிரோடு மிளகின் சாறும், 

நன்மது ரஞ்செய் கிழங்கு - காணில்

நாவிலி னித்திடும்அப்பம். 

உன்னை வளர்ப்பன தமிழா!  ஊயிரை

 உணர்வைம் வளர்ப்பது தமிழே!


சங்க நாதம்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் 

மங்காத தமிழென்று சங்கே முழங்கு! 

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்.

இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!


திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்க ளோடும் 

மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமிழுடன் பிறந்தோம் நாங்கள், ஆண்மைச் 

சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபம் செய் முழங்கு சங்கே (எங்)

சிங்களஞ்சேர் தென்னாட்டு மக்கள்

தீராதி தீரரென் றூதாது சங்கே!

பொங்கும் தமிழர்க் கின்னல் விளைத்தால்

சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள் வெற்றித் தோள்கள்!

கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்! 

வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ் எங்கள் மூச்சாம்!          (எங்)





Comments

Popular posts from this blog

2. வேத கலாச்சாரம் (Harappan/Indus Civilization)

1. ஹரப்பா/சிந்து நாகரிகம் (கிமு 2500 கிமு -1750)